கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து அதிரடியாக 20 ஆப்ஸ்கள் நீக்கப்பட்டுள்ளது. கூகுளின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு காரணம், அந்த 20 ஆப்ஸ்களும் பயன்பாட்டாளர்களின் ரகசிய தகவல்களை திருடும் வேலையை செய்ததுதான் என்பது தெரிய வந்துள்ளது.
ஒருசில ஆப்ஸ்கள் பயன்பாட்டாளர்களின் முக்கிய தகவல்களை திருடுவதாக கடந்த சில மாதங்களாகவே குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து ஆய்வு செய்தபோது 20 ஆப்ஸ்கள் பயன்பாட்டாளர்களுக்கு தெரியாமலேயே அவர்கள் இருக்கும் இடங்களை தெரிந்து கொள்ளுதல், புகைப்படங்களை திருடுவதல், கேமிரா மூலம் அவர்களுக்கே தெரியாமல் புகைப்படம் எடுத்தல், மேலும் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு வரும் தகவல்களை இடைமறித்து திருடுதல் போன்றவற்றில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டது.