2 கொரில்லா குரங்குகளுக்கு கொரோனா பாதிப்பு: அமெரிக்காவில் மேலும் ஒரு அதிர்ச்சி!

செவ்வாய், 12 ஜனவரி 2021 (08:37 IST)
2 கொரில்லா குரங்குகளுக்கு கொரோனா பாதிப்பு
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி மனித இனத்தையே ஆட்டிப்படைத்து வரும் நிலையில் ஒரு சில நாடுகளில் விலங்குகளுக்கும் கொரோனா பரவி வந்ததாக செய்திகள் வெளியானது. அந்த வகையில் தற்போது அமெரிக்காவில் இரண்டு கொரில்லா குரங்குகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது
 
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பூங்காவில் வளர்ந்து வரும் இரண்டு கொரில்லா குரங்குகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த பூங்காவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 2 கொரில்லா குரங்குகளுக்கு தொடர்ந்து இருமல் வந்ததாகவும் இதனை அடுத்து அந்த குரங்குகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் குரங்குகளுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது 
 
குரங்குகளுக்கு எப்படி பரவியது என்ற அதிர்ச்சியில் பூங்கா நிர்வாகிகள் உள்ளனர் என்பதும் அந்த இரண்டு குரங்குகளும் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அந்நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்