இதனையடுத்து மருத்துவர்கள் சிறுமியிடன் இது குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அந்த சிறுமி கடந்த இரு வருட காலமாக எனது பெற்றோர் என்னை பாலியல் அடிமையாக வைத்து துன்புறுத்துவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து மருத்துவமனை தரப்பு போலீஸில் புகார் அளித்துள்ளது. அப்போது போலீஸார் நடத்திய அதிரடி விசாரணையில், சிறுமியின் தந்தை மட்டுமின்றி தாயும் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லைகள் கொடுத்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து அந்த சிறுமியின் பெற்றோர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து அந்த சிறுமியின் பெற்றோர்கள் கூறியதாவது, எனது மகளுக்கு பாலியல் உறவுகளைப் பற்றியும், பாலியல் கல்வி பற்றியும் தெரிந்துக்கொள்வதற்காகவே இப்படி செய்தோம் என கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த குற்றம் நிரூபிக்கப்படும் நிலையில், பெற்றோருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என தெரிகிறது. மேலும், அந்த சிறுமி குழந்தைகள் நல காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.