விண்வெளியில் வை-பை வசதியுடன் கூடிய ஐந்து நட்சத்திர ஹோட்டல்!

செவ்வாய், 26 டிசம்பர் 2017 (14:33 IST)
சுற்றுலா பயணிகளை கவரும் நோக்கில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆடம்பர விடுதியை கட்ட தனியார் மற்றும் ரஷ்ய அரசு திட்டமிட்டுள்ளது.
அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, ஜப்பான், கனடா, உள்ளிட்ட 17 ஐரோப்பிய நாடுகளின் விண்வெளிகழகமும் இணைந்து 150 பில்லியன் டாலர் (ரூ,96 லட்சத்து 75 ஆயிரம் கோடி) செலவில் பூமிக்கு மேல் விண்வெளியில் 400 மைல் தொலைவில், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை உருவாக்கி வருகிறது.விண்வெளிக்கு சுற்றுலா பயணிகளை கவர ஆடம்பர 5 ஸ்டார் ஹோட்டலை கட்ட ரஷ்ய அரசு திட்டமிட்டுள்ளது. 3300 கோடி செலவில் கட்டப்படும் இந்த ஹோட்டலில் மருத்துவ வசதி, உடற்பயிற்சி கூடம், வை-பை வசதி போன்றவைகள் ஏற்பட்டுத்தப்பட உள்ளது. சுற்றுலா பயணிகள் இங்கு 1 முதல் 2 வாரங்கள் வரை தங்க 300 கோடி ரூபாய் கட்டணமாக வசூலிக்கப் படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்