சென்னை டு மும்பை ஒரு மணி நேரம் தான்: மணிக்கு 1000 கி.மீ. அதிவேக ஹைப்பர்லூப் ரயில்..!

Siva

சனி, 10 ஆகஸ்ட் 2024 (11:25 IST)
மணிக்கு 1000 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் அதிவேக ஹைபர் லூப் ரயில் உருவாக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டு வருவதாக கூறப்படுவது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் இருந்து மும்பைக்கு சுமார் 1000 கிலோமீட்டர் என்ற நிலையில் தற்போது ரயில் 22 மணி நேரம் பயணம் செய்கிறது. ஆனால் சீனாவில் இந்த ஹைப்பர் லூப் ரயில் உருவாகிவிட்டால் 1000 கிலோமீட்டர் தூரத்தை ஒரு மணி நேரத்தில் கடந்து விடலாம் என்று குறிப்பிடத்தக்கது.

இந்த ரயிலை உருவாக்கும் முயற்சியில் சீனா இறங்கி உள்ளதாகவும் இதற்காக இரண்டு கிலோ மீட்டர் தொலைவிற்கு வழித்தடம் உருவாக்கி சோதனை ஓட்டம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த ரயில் பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் சீன தலைநகர் பெய்ஜிங்கில் இருந்து ஷாங்காய் நகருக்கு இடையே உள்ள 1200 கிலோமீட்டர் தூரத்தை ஒன்றரை மணி நேரத்தில் கடந்து விட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

விமானத்திற்கு நிகராக செல்லும் இந்த ரயில் பயன்பாட்டுக்கு வந்த பிறகு விமானங்களில் செல்வதை மக்கள் தவிர்த்து விட்டு இந்த அதிவேக ரயிலில் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி ஒரு ரயில் இந்தியாவுக்கு வருமா? அப்படியே வருவதாக இருந்தாலும் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்