வீட்டில் வைத்திருந்த பிரிட்ஜ் வெடித்து விபத்து- 10 பேர் பலி! பிரதமர் இரங்கல்

வியாழன், 13 ஜூலை 2023 (12:50 IST)
பாகிஸ்தான் நாட்டில் வீட்டில் வைத்திருந்த பிரிட்ஜ் வெடித்துச் சிதறியது. இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் பலியாகினர்.

பாகிஸ்தான்  நாட்டில்  பிரதமர் ஷபாஷ் ஷெரீப் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.
இங்குள்ள வடகிழக்கு மாகாணமாக பஞ்சாப்பின் தலைநகர்  லாகூரில் உள்ள நூர் மெகல்லா என்ற பகுதி  உள்ளது.

இங்கு ஒரு வீட்டில் கூட்டுக் குடும்பம் ஒன்று வசித்து வந்தது. இவர்கள் வீட்டில் பிரிட்ஜ் வைத்திருந்தனர். இந்த பிரிட்ஜ் நேற்று நள்ளிரவு 2 மணியளவில் அதிக சத்தத்துடன் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியதால் அருகில் இருந்த மக்கள் பதற்றம் அடைந்தனர்.

இத்குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வனந்தனர். அவர்கள் போராடி தீயணை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் வீடு முழுவதும் சேதமடைந்தது. தீயை அணைத்த பின்னர், தீயணைப்புத்துறையினர் வீட்டிற்குள் நுழைந்தபோது, அந்த வீட்டில் வசித்தவர்களில் உடல்கள் சிதறிக் கிடந்துள்ளது.

அவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

திடீர் மின்கசிவு ஏற்பட்டு, நள்ளிரவில், பிரிட்ஜின் கம்பரசர் பயங்கர சத்தத்துடன் வெடித்ததாகவும், இதில், ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாக வசித்த 7 மாதக் குழந்தை, 5 சிறுவர்கள் உள்ளிட்ட   10 பேர் பலியானதாக தகவல் வெளியாகிறது.

இத சம்பவத்திற்கு பிரதமர் ஷபாஷ் ஷெரீப் இரங்கல் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்