இந்த தீ விபத்தில் வீடு முழுவதும் சேதமடைந்தது. தீயை அணைத்த பின்னர், தீயணைப்புத்துறையினர் வீட்டிற்குள் நுழைந்தபோது, அந்த வீட்டில் வசித்தவர்களில் உடல்கள் சிதறிக் கிடந்துள்ளது.
அவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
திடீர் மின்கசிவு ஏற்பட்டு, நள்ளிரவில், பிரிட்ஜின் கம்பரசர் பயங்கர சத்தத்துடன் வெடித்ததாகவும், இதில், ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாக வசித்த 7 மாதக் குழந்தை, 5 சிறுவர்கள் உள்ளிட்ட 10 பேர் பலியானதாக தகவல் வெளியாகிறது.