உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் 3,44,64,456 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர் என்றும், உலகில் கொரோனா தொற்றால் இதுவரை 10,27,042 பேர் மரணம் அடைந்துள்ளனர் என்றும் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் உலகில் கொரோனா தொற்றில் இருந்து 25,647,795 பேர் குணமடைந்தனர் என்றும், உலகில் கொரோனா பாதிப்புடன் தற்போது 77,89,619 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்றும் உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது
உலகில் மிக அதிகமாக கொரோனா பாதிப்பு உடைய அமெரிக்காவில் இதுவரை கொரோனாவால் 7,494,615 பேர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர் என்பதும், 212,660 பேர்கள் பலியாகியுள்ளனர் என்பதும், 4,736,612 பேர்கள் குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
அதேபோல் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் 6,391,960 பேர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர் என்பதும், 99,804 பேர்கள் பலியாகியுள்ளனர் என்பதும், 5,348,653 பேர்கள் குணமடைந்துள்ளனர். மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் கொரோனாவால் 4,849,229 பேர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர் என்பதும், 144,767 பேர்கள் பலியாகியுள்ளனர் என்பதும், 4,212,772 பேர்கள் குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
மேலும் ரஷ்யா, கொலம்பியா, பெரு, ஸ்பெயின், அர்ஜெண்டினா, மெக்சிகோ, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் கொரோனா பாதிப்பில் முதல் பத்து நாடுகளாக உள்ளன.