சூர்யாவை சவாலுக்கு அழைத்த பிரகாஷ் ராஜ்! மகனுடன் வெளியிட்ட புகைப்படம்!

வியாழன், 1 அக்டோபர் 2020 (16:32 IST)
நடிகர் பிரகாஷ் ராஜ் தனது மகனுடன் செடி ஒன்றை நடும் புகைப்படத்தை வெளியிட்டு கிரீன் இந்தியா சேலஞ்சுக்கு சூர்யாவை அழைத்துள்ளார்.

நடிகர் மகேஷ் பாபு தனது பிறந்தநாளில் செடி ஒன்றை நட்டு அதைப் புகைப்படமாக வெளியிட்டு அதில் நடிகர் விஜய்யை டேக் செய்து அவரையும் இந்த சேலஞ்சில் கலந்துகொள்ளும்படி கேட்டிருந்தார். அதன்படி விஜய்யும் அந்த புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் இப்போது நடிகர் பிரகாஷ் ராஜ் தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அதில் நடிகர்கள் சூர்யா, த்ரிஷா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் மோகன் லால் ஆகியோரையும் கிரீன் இந்தியா சேலஞ்சுக்கு அழைப்பு விடுத்தார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்