மனித நுரையீரலைப் பாதுகாக்கும் கருவி கண்டுபிடிப்பு

திங்கள், 10 பிப்ரவரி 2014 (18:20 IST)
உடலில் இருந்து அகற்றப்பட்ட மனித நுரையீரலை வெளியே பாதுகாக்கும் கருவியை மருத்துவ குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.
FILE

மனித உடலில் இருந்து அகற்றப்பட்ட உறுப்புகளை மாற்று அறுவை சிகிச்சை மூலம் குறிப்பிட்ட நேரத்துக்குள் மற்றொருவரின் உடலில் பொருத்துகின்றனர். ஆனால் நேரம் தவறி விட்டால் அகற்றப்பட்ட உடல் உறுப்பு செயலிழந்துவிடும். அதனால் உடனடியாக மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டிய சூழல் தற்போது நடைமுறையில் உள்ளது. அந்தப் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் தற்போது அதிநவீன கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு ‘உடல் உறுப்பு பாதுகாப்பு கருவி’ என பெயரிடப்பட்டுள்ளது.

பெட்டி போன்று வடிவமைக்கப்பட்டுள்ள அந்தக் கருவியில் மனித உடலில் நிலவும் வெப்பநிலை இருக்கும். அது மனித உறுப்புகளை உடலில் இருப்பது போன்று பல மணி நேரம் பாதுகாக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் மாற்று அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட மனித நுரையீரல் இப்பெட்டியில் வைத்து பாதுகாக்கப்பட்டது. பின்னர் அது மற்றொருவரின் உடலில் பொருத்தப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

இச்சாதனையை அமெரிக்காவின் ‘போனிக்கஸ்’ மருத்துவமனையின் மருத்துவர்கள் குழு நிகழ்த்தியுள்ளது.

நுரையீரல் மட்டுமின்றி உயிர் காக்கும் இருதயம், சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் போன்ற உறுப்புகளையும் இந்தக் கருவியின் மூலம் பாதுகாக்க முடியும்.

வெப்துனியாவைப் படிக்கவும்