இலங்கைக்கெதிராக பிரிட்டன் எம்.பி.க்கள் 41 போ் பிரதமரிடம் மனு

வெள்ளி, 18 பிப்ரவரி 2011 (13:11 IST)
இலங்கைக்கு எதிராக பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 41 பேர் பிரதமர் டேவிட் கேம்ரூனிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

இலங்கைக்கெதிரான பாரபட்சமற்ற சர்வதேச விசாரணையொன்று உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தி, 41 பேரது கையெழுத்துடன் அம்மனு டேவிட் கேம்ரூனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இறுதி யுத்த காலத்தில் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாகவே இலங்கைக்கெதிரான சர்வதேச விசாரணை வேண்டும் என்று அந்த மனுவில் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

"தமிழ் மக்களுக்கான சர்வகட்சிப் பேரவை" எனும் அமைப்பொன்றையும் அவர்கள் உருவாக்கியுள்ளனர்.

அதில் பிரிட்டனின் மூன்று கட்சிகளைச் சோ்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்