ஜோக்கர் படத்துக்கு வந்த மிரட்டல் – அமெரிக்காவில் காட்சிகள் ரத்து !

திங்கள், 7 அக்டோபர் 2019 (08:48 IST)
பிரபல ஹாலிவுட் படமான ஜோக்கர் படம் திரையிடப்பட்ட தியேட்டர் ஒன்றுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதால் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பிரபல காமிக்ஸ் கேரக்டரான ஜோக்கர் எப்படி உருவானான் என்பது குறித்து உருவாக்கப்பட்ட படமான ஜோக்கர் சமீபத்தில் வெளியானது. உலகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள அந்த படம் அமெரிக்காவின் ஒரு திரையரங்கில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் ஹண்டிங்டன் கடற்கரையில் உள்ள திரையரங்கத்தில் ஜோக்கர் திரைப்படம் வெளியானது. ஆனால் அந்த தியேட்டருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக போலிஸாருக்குத் தகவல் கிடைத்ததால் அந்த தியேட்டரில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. யார் மிரட்டல் விடுத்தது என்பது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 2012 ஆம் ஆண்டு டார்க் நைட் அரைசஸ் என்ற படத்தின் திரையிடலின் போது ஒருவன் துப்பாக்கியோடு தியேட்டருக்கு வந்து 12 பேரை சுட்டுக் கொன்றது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்