பெண்கள் எந்த முறையில் நமஸ்காரம் செய்யவேண்டும் தெரியுமா...?

இந்து மதக் கலச்சாரத்தில் நமஸ்காரமானது மிகவும் முக்கியமானது. கடவுளை வணங்குவதாகட்டும், அல்லது பெரியவர்களை வணங்குவதாகட்டும், நமஸ்காரம்  மிகவும் முக்கியமாகும். 

நமஸ்காரத்தில் பல்வேறு வகைகள் உள்ளது. அதில் சாஷ்டாங்க நமஸ்காரம் என்பது மிகவும் புனிதமானது. இதில் உடலின் அனைத்து பாகங்களும் அதாவது அங்கங்கள் அனைத்தும் தரையில் படும். சாஷ்டங்க நமஸ்காரம் பொதுவாக "தண்டகார நமஸ்காரம்" மற்றும் "உதண்ட நமஸ்காரம்" என்றும் அறியப்படுகிறது. 
 
இந்து மத கோட்பாட்டின் படி, "தண்டா" என்கிற வார்த்தைக்கு "குச்சி" என்று பொருள். எனவே, ஒருவர் இந்த வகை நமஸ்காரம் செய்யும் பொழுது அந்த நபர்  தரையில் விழுந்த குச்சி போல தெரிவதால் இதற்கு இந்த வகை பெயர் வழங்கப்படுகின்றது.
 
அர்த்தம் இந்த செய்கையானது ஒரு விழுந்த குச்சி எவ்வாறு உதவியற்ற நிலையில் இருக்கின்றதோ, அதே நிலையில் தான் இருக்கின்றேன்; எனக்குஉன்னைச்  சரணடைவதைத் தவிர வேறு கதி இல்லை; நீயே எனக்குத் தஞ்சம் என இறைவனை நோக்கி இறைஞ்சுவதை குறிக்கின்றது. மேலும் இந்த சாஷ்டாங்க நமஸ்காரம் இறைவனின் பாதங்களை நீங்கள் சரணாகதி அடைந்ததை குறிக்கும் ஒரு சின்னமாக விளங்குகின்றது
 
இந்து மத மரபுகளின் படி, பெண்கள் இந்த வகை நமஸ்காரம் புரியக்கூடாது. ஏனெனில் பெண்களின் கர்ப்பப்பை மற்றும் மார்பகங்கள் தரையில் படக்கூடாது. பெண்கள் 'பஞ்சாங்க நமஸ்காரம்' மட்டுமே புரிய வேண்டும். அவர்கள் எப்பொழுதும் சாஷ்டாங்க நமஸ்காரம் புரியக்கூடாது. 
 
பெண்கள் தங்களுடைய உள்ளங்கைகளை ஒன்றாக சேர்ந்து தன் முன் உள்ள பெரியவர்களின் முன் மண்டியிட்டு தன் மதிப்பிற்குரியவர்களின் கால்கள் தொட்டு  வணங்குவது 'பஞ்சாங்க நமஸ்காரம்' என அழைக்கப்படுகின்றது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்