செய்முறை:
வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மிளகாயை சிறு துண்டுகளாக கிள்ளி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவைப் போட்டு அதில் உப்பு, நறுக்கிய வெங்காயம், மிளகாய் துண்டுகள், சீரகம், இடித்த பூண்டு ஆகியவற்றைப் போட்டுக் கலந்து வைக்கவும்.
ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காய்த்தூள், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டுத் தாளித்து, மாவில் கொட்டவும். பின்னர் அதில் தேவையான அளவு தண்ணீரைத் தெளித்து பிசையவும். மாவு சப்பாத்தி மாவை விட சற்று தளர இருக்க வேண்டும்.