முதலில் சீரகம், மிளகு, கிராம்பு, ஏலக்காய், காய்ந்த மிளகாய், தனியா, கசகசா, முந்திரி, தேங்காய் ஆகியவற்றை எண்ணெய் ஊற்றாமல் வறுத்துக் கொள்ளவும். பின் அதில் சூடு போனதும் மிக்ஸியில் பேஸ்டாக மைய அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் தக்காளி மற்றும் காய்ந்த மிளகாயையும் பேஸ்டாக அரைத்துக் கொள்ளவும். முட்டைகளை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். அடுத்ததாக கடாயில் எண்ணெய் ஊற்றி காய விடவும். அதில் கடுகு மற்றும் சீரகம் போட்டுக் பொறிக்கவும்.
பிறகு வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். பொன்னிறமாக வந்ததும் தக்காளி பேஸ்டை போட்டு வதக்கவும். ஊற்றிய எண்ணெய் தனியே பிரிந்து வரும் வரை வதக்கவும். அடுத்ததாக வறுத்து அரைத்த பேஸ்டை அதில் போடவும். குறைந்த அளவு நீர் ஊற்றி கொதிக்க விடவும்.
கொதிநிலையை அடையும் போது வேகவைத்த முட்டைகளை அதில் போடவும். சிறு தீயில் 10 நிமிடங்கள் கெட்டியாகும் வரை கொதிக்கவிடவும். இறுதியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கி விடவும். சுவையான செட்டிநாடு முட்டை மசாலா ரெடி. இது சாதத்துக்கு மிகவும் சுவையாக இருக்கும்.