செய்முறை:
அரிசி, உளுந்து, வெந்தயம் சேர்த்து நன்கு அலசி சுமார் 6 மணி நேரம் ஊறவைக்கவும். தண்ணீர் வடித்து விட்டு சாதம் கலந்து மிக்ஸியில் ஒரு முறை அல்லது இரு முறையாகவோ போட்டு தேவைக்கு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்.
அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து உப்பு, சோடா உப்பு, சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து மூடி போட்டு வைக்கவும். முதல் நாள் மாலை அரைத்தால் மறுநாள் காலை சுட சரியாக இருக்கும்.