சௌசௌ சட்னி வித்தியாசமான அசத்தலான சுவையில் இருக்கும். இதனைச் செய்வது மிகவும் எளிது. இட்லி, தோசை, சப்பாத்தி, சாதவகைகள் என எல்லாவற்றிற்கும் மிகவும் பொருத்தமானது.
செய்முறை:
சௌசௌ, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சௌசௌ, காய்ந்த மிளகாய், தக்காளியை சேர்த்து சுருள வதக்கவும்.
வதக்கியதை ஆறவிட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து அரைத்த விழுது, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் சுண்டும் வரை கொதிக்க விடவும். விரும்பினால் ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். சுவையான சௌசௌ சட்னி தயார்.