‌டி‌வி‌யி‌ல் தீபாவ‌ளி‌‌த் ‌திரை‌ப்பட‌ங்க‌ள்

திங்கள், 1 நவம்பர் 2010 (14:59 IST)
தீபாவ‌ளி‌த் த‌ிருநா‌ள் வரு‌ம் வெ‌‌ள்‌ளி‌க்‌கிழமை கொ‌ண்டாட‌ப்பட உ‌ள்ளது. இதை தொலை‌க்கா‌ட்‌சி‌ச் சேன‌ல்களு‌ம் பு‌திய ‌திரை‌ப்ப‌ட‌ங்களுட‌ன் கொ‌ண்டாட‌த் தயா‌ரா‌கி ‌வி‌ட்டது.

பு‌‌த்த‌ம் பு‌திய ‌திரை‌ப்பட‌ங்க‌ளை ஒ‌ளிபர‌ப்‌பி, நேய‌ர்க‌ளி‌ன் ஏகோ‌பி‌த்த வரவே‌ற்பை‌ப் பெறுவ‌தி‌ல் அனை‌த்து‌த் தொலை‌க்கா‌ட்‌சிகளு‌ம் போ‌ட்டி‌ப்போ‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளன.

அ‌ந்த வ‌ரிசை‌யி‌ல், தீபாவளியையொட்டி விஜய் டிவியில் வரும் வியாழன் இரவு 7.30 மணிக்கு விமல் நடித்த களவாணி திரைப்படம் ஒளிபரப்பாகிறது. சமீபத்தில் வெளியான இந்தப் படம் திரையரங்குகளிலும் பெருவாரியான வசூலை குவித்தது.

மறுநாள் தீபாவளி தினத்தில் மாலை 4 மணிக்கு அறிவழகன் இயக்கிய ஈரம் படம் ஒளிபரப்பாகிறது. டைரக்டர் ஷங்கர் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

கலைஞ‌ர் டி‌வி‌யி‌ல் ர‌ஜி‌னிகா‌ந்‌த் நடி‌த்த மெகா ‌‌‌ஹ‌ி‌ட் ‌திரை‌ப்பட‌ம் ‌சிவா‌ஜி ஒ‌ளிபர‌ப்பா‌கிறது. ‌‌தீபாவ‌ளிய‌ன்று 5.30 ம‌ணி‌க்கு இ‌த்‌திரை‌ப்பட‌ம் ‌ஒ‌ளிபர‌ப்பாகு‌ம்.

மேலு‌ம், நடிக‌ர் ஆ‌ர்யா - ‌த்‌ரிஷா நடி‌த்த ச‌ர்வ‌ம் ‌திரை‌ப்படமு‌ம் ஒ‌ளிபர‌ப்பாக உ‌ள்ளது.

ரா‌ஜ் டி‌வி‌யி‌ல் ‌விஜயகா‌ந்‌த் நடி‌த்த ம‌ரியாதை ‌திரை‌‌ப்பட‌ம் ஒ‌ளிபர‌ப்ப‌ப்படு‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்