பாஜக 104, காங்கிரஸ் 78, மஜத 38 ஆகிய இடங்களை கைப்பற்றி இருந்தது. ஆனால், ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இல்லாததால், அங்கு குழப்பம் ஏற்பட்டது. இதனையடுத்து பாஜகவை ஆட்சியமைக்க ஆளுநர் வஜூபாய் வாலா அழைப்பு விடுத்தார்.
இதனை எதிர்த்து காங்கிரஸ் - மஜத கட்சி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கர்நாடக சட்டமன்றத்தில் நாளை பெரும்பான்மையை நிரூபிக்க வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டுள்ளனர்.
இது குறித்து எடியூரப்பா பேசியதாவது, தலைமை செயலாளருடன் பேசி சட்டமன்றத்தை கூட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும், நாளை நிச்சயம் 100% பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி பெறுவேன் என்று தெரிவித்துள்ளார்.