செங்கோட்டையன், இன்று அளித்த செய்தியாளர் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பரப்புரைகளில் தான் கலந்துகொள்ள வேண்டுமென்றால், அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்ற தனது கோரிக்கைகள் ஏற்கப்பட வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தார். மேலும், கோரிக்கைகளை நிறைவேற்ற 10 நாட்கள் கெடுவும் விதித்திருந்தார்.
செங்கோட்டையனின் இந்த நிபந்தனை காரணமாக, எடப்பாடி பழனிசாமி, இன்று நடத்தவிருந்த அ.தி.மு.க.வின் முக்கிய ஆலோசனை கூட்டத்தை ரத்து செய்துள்ளார். தேனியில் ஈபிஎஸ் தலைமையில் இன்று விவசாயிகளுடன் நடைபெற இருந்த ஆலோசனைக் கூட்டம் திடீர் ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது.