சர்காருக்கு அடுத்த ஆப்பு ரெடி!! அரசு வழக்கறிஞர்களுடன் திடீர் ஆலோசனை

வியாழன், 8 நவம்பர் 2018 (12:25 IST)
சர்கார் சர்ச்சை தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம்  தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணனுடன் திடீர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
 
முருகதாஸ் - விஜய் கூட்டணியில் உருவாகி பல கதை திருட்டு வழக்கு சர்ச்சைகளை தாண்டி தீபாவளி அன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அரசியல் வட்டாரங்களில் சர்சைகளை ஏற்படுத்தியுள்ளது. 
 
குறிப்பாக, சர்கார் படத்தில் வரும் பல வசனங்கள் ஆளும் கட்சியை கடுமையாக விமர்சிப்பதாக இருக்கிறது. இதனால் ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் சி.வி.சண்முகம், கடம்பூர் ராஜூ, ஜெயக்குமார், கே.பி.அன்பழகன் ஆகியோர் விஜய் மற்றும் முருகதாஸ் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்கள்.
 
சினிமா எடுக்கிறேன் என்ற பெயரில் தீவரவாதி செய்யும் செயலை செய்துள்ளது சர்கார் படக்குழு என கூறியிருந்தார் அமைச்சர் சண்முகம்.
 
இந்நிலையில்  தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணனுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் . ஏற்கனவே சர்கார் படம் மீது வழக்கு தொடரப்படும் என அமைச்சர் சண்முகம் கூறியிருந்ததால், இந்த ஆலோசனை சர்கார் படத்தின் மீது வழக்கு தொடருதல் சம்மந்தமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
 
நாளுக்கு நாள் சர்கார் மீதான எதிர்ப்புகள் வழுத்துக் கொண்டே போகிறது, இதனை சர்கார் படக்குழு எப்படி எதிர் கொள்ளப்போகிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்