புதிய சாதனை படைத்த ஆளப்போறான் தமிழன்

திங்கள், 4 ஜூன் 2018 (12:54 IST)
விஜய் நடிப்பில் கடந்தாண்டு வெளியான மெர்சல் படத்தில் இடம்பெற்றிருந்த ஆளப்போறான் தமிழன் பாடல் யூடியூப்பில், அதிகம் பேர் பாக்கப்பட்டு புதிய சாதனையை படைத்துள்ளது. 
இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி சுமார் ரூ.200 கோடி வசூல் செய்து சூப்பர் ஹிட் பட பட்டியலில் இணைந்தது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற விஜய் விருது வழங்கும் விழாவில் இந்த படம் ஐந்து விருதுகளை வென்றுள்ளது.
மேலும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஆளப்போறான் தமிழன், பாடல் தமிழர்களின் பெருமையை வெளிபடுத்தும் விதமாக இருந்ததால், இப்பாடல் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது. இந்த பாடலை யூடியூப்பில் இதுவரை 5 கோடி பேர் பார்த்து, இப்பாடல் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்