செய்வதோ உதவியாளர் பணி.. ஆனா சொத்து மதிப்போ 100 கோடி

வெள்ளி, 22 ஜூன் 2018 (15:15 IST)
மின்துறையில் உதிவியாளராக பணியில் சேர்ந்த நபருக்கு 100 கோடி ரூபாய் சொத்து எப்படி சேர்ந்தது என லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தி வருகிறது.
ஆந்திர மாநிலம் நெல்லூரில் கலாளியில் லட்சுமி ரெட்டி என்பவர் கடந்த 1993 ஆம் ஆண்டு உதவியாளராக பணியில் சேர்ந்தார். 1996-ம் ஆண்டு உதவி லைன் மேனாகவும், 1997-ம் ஆண்டு லைன்மேனகாவும் பின் 2017-ம் ஆண்டு லைன் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றார்.
 
இந்நிலையில் லட்சுமி ரெட்டி வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்து இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
 
இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் லட்சுமிரெட்டி வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த அதிரடி சோதனையில் 57.50 ஏக்கர் விவசாய நிலங்கள், அப்பார்ட்மெண்டுகள் ஆகிய பத்திரங்கள் சிக்கின. இதன் மதிப்பு சுமார் 100 கோடி இருக்கும் எனத் தெரிகிறது. லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் லட்சுமி ரெட்டியை கைது செய்து எப்படி இவ்வளவு சொத்து சேர்த்தார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்