இதுகுறித்து அந்த பெண்ணின் காதலர் வில்லியம் கூறுகையில், ’அன்றைய தினம் நான் வீட்டிற்குள் நுழைந்த போது, என் காதலி ரத்தக்கரையுடன் ஒரு குழந்தையைக் கொண்டு வந்து இனி இது நம்முடைய குழந்தை என்றார். ஆனால் என் காதலி கொலை செய்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது’ என்று முதலில் போய் வாக்கு மூலம் பதிவுசெய்திருந்தார்.
பின் வில்லியமின் வீட்டில் சோதனை மேற்கொண்ட போலீஸார் அங்கே இருந்த ஒரு கயிற்றினை கண்டெடுத்து அதில் டி.என்.ஏ சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையின் முடிவில் வில்லியம் கர்ப்பிணி சவான்னாவின் கழுத்தை நெரித்து கொன்றது உறிதியானது. இதனையடுத்து அவர்களுக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத ஆயுள் தண்டணை விதிக்கப்பட்டது என செய்திகள் வெளியாகியுள்ளன.