ஆனால், தேர்தல் பிரசாரத்திற்கு அவரை புக் பண்ண முடியாமல் அதிமுக வேட்பாளர்கள் தவியாய் தவித்து வருகின்றனர். காரணம், நமீதா தேர்தல் பிரசாரம் செய்தால், அது வாக்காளர்களிடம் நன்கு எடுபடும் என வேட்பாளர்கள் கருதுகின்றார்களாம். இதனால், தங்களது தேர்தல் பிரசாரத்தில் நமீதாவுக்கு முன்னுரிமை கொடுக்க முடிவு செய்துள்ளனர். ஆனால், தலைமை இன்னும் சிக்னல் கொடுக்கவில்லையாம். விரைவில் தலைமை கிரீன் சிக்கனல் கொடுத்துவிடும் என தகவல் வெளியாகியுள்ளது.