திமுக மாவட்டச் செயலாளர் திடீர் ராஜினாமா

ஞாயிறு, 22 மே 2016 (12:12 IST)
திருப்பூர் மாவட்டத்தில், திமுக தோல்வி எதிரொலியாக  திமுக மாவட்ட செயலாளர் செல்வராஜ் தனது மாவட்டச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார்.
 

 
நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில், திருப்பூர் தெற்கு தொகுதியில், திமுக மாவட்டச் செயலாளர் செல்வராஜ், திருப்பூர் வடக்கு தொகுதியில் முன்னாள் அமைச்சர் மு.பெ.சாமிநாதன், அவினாசி தொகுதியில் அன்னூர் ஒன்றிய திமுக செயலாளர் ஆனந்தன், பல்லடம் தொகுதியில் அதன் ஒன்றிய திமுக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் படுதோல்வி அடைந்தனர்.
 
இதனையடுத்து, திருப்பூர் வடக்கு திமுக மாவட்ட செயலாளர் செல்வராஜ் தனது மாவட்டச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 

வெப்துனியாவைப் படிக்கவும்