இப்படி ஒரு முதல்வர் தேவையா? திருநாவுக்கரசர் கேள்வி

செவ்வாய், 3 மே 2016 (06:30 IST)
மக்களையும், பிரதமரையும் சந்திகாத ஒரு முதல்வர் இந்த நாட்டிற்கு தேவையா என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

 
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்ட மன்ற தொகுதியில், திமுக வேட்பாளர் பழனியப்பனை ஆதரித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில்,  கடந்த 5 வருடம் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது எப்போதாவது வந்து மக்களை சந்தித்துள்ளாரா?  5 ஆண்டுகளில் 5 முறைக்கூட மக்களை சந்திக்க சுற்றுப் பயணம் செய்யவில்லை.
 
ஜெயலலிதாவை, அவரது கட்சி எம்எல்ஏ-க்கள், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், ஏன், மத்திய அமைச்சர்கள் கூட சந்திக்க முடியவில்லை.
 
கடந்த காலத்தில் எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது  தமிழகத்தின் நலன் மற்றும் வளர்ச்சி கருதி டெல்லிக்குச் சென்று பிரதமரையும், நிதி அமைச்சரையும் சந்தித்து பல திட்டங்களை பெற்று வந்துள்ளார்.
 
ஆனால், ஜெயலலிதா இது வரைக்கும் ஒரு முறைக்கூட பிரதமரையோ,டெல்லி சென்று கேபினட் மந்திரிகளையோ சந்தித்துள்ளாரா இல்லை. அப்படி இருக்கையில் தமிழகத்திற்கு இப்படி ஒரு முதலமைச்சர் தேவையா என கேள்வி எழுப்பியவர், மக்களை சந்திக்காத முதல்வர், மக்கள் அனுகமுடியாத முதல்வர் நாட்டிற்கு தேவையில்லை. னவே, அவரை வீட்டிற்கு அனுப்புங்கள் என்றார்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்