நடைபெற்று முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் 134 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைக்கிறது. இதனையடுத்து, மே 23 ஆம் தேதி தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்க உள்ளார். இந்த விழா, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற உள்ளது.
இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி, தகவல் தொழில்நுட்ப மற்றும் தொலைதொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.