பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது நடவடிக்கை காரணமாக பலரின் மனதையும் அள்ளினார் ஓவியா. அதனால், அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். அதேபோல், அந்த நிகழ்ச்சியில் உள்ள ஜூலி, காயத்தி ஆகியோர் ஓவியாவிற்கு எதிராக செயல்பட்ட போதும், அவரை அழ வைத்த போதும், ஓவியா ஆர்மி, ஓவியா பேரவை எனத் தொடங்கி அவருக்கு ஆதரவாகவும், காயத்திர், ஜூலி ஆகியோருக்கு எதிராகவும் சமூகவலைத்தளங்களில் நெட்டிசன்கள் கருத்துகள் மற்றும் மீம்ஸ்களை அள்ளித் தெளித்தனர்.