பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடக்கத்திலிருந்தே கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்தவர் ஓவியா. எதற்கும் அலட்டிக் கொள்ளாமல், மற்றவர்களுக்காக தன்னை மாற்றிக் கொள்ளாமல், வெளிப்படையாகவும், மனதில் பட்டதை பேசிக்கொண்டும், எப்போதும் சிரித்தபடி வலம் வந்த அவரை பலருக்கும் பிடித்துப்போனது.
இந்நிலையில், பிக்பஸ் நிகழ்ச்சியில் ஓவியா இருந்த போது நடைபெற்ற நிகழ்ச்சிகளை தொகுத்து ஒரு அழகான வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை விஜய் தொலைக்காட்சியும் தனது அதிகாரப்பூர்வமான சமூகவலைத்தள பக்கங்களில் “ ஓவியமாய் வந்து உள்ளங்களை கொள்ளைக் கொண்ட ஓவியா” என்ற தலைப்புடன் பதிவு செய்துள்ளது.