ப‌ல்வேறு அருவிகளை‌க் காண சு‌ற்றுலா‌த் ‌தி‌ட்ட‌ம்

புதன், 9 செப்டம்பர் 2009 (11:46 IST)
ப‌ல்வேறு அரு‌விகைள ஒரே பயண‌த்‌தி‌ல் க‌ண்டு வரு‌ம் வகை‌யி‌ல் அரு‌விகளு‌க்கான சு‌ற்றுலா‌த் ‌தி‌ட்ட‌த்தை த‌மி‌ழ்நாடு சு‌ற்றுலா வள‌ர்‌ச்‌சி‌க் கழக‌ம் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ளது.

இது கு‌றி‌த்து தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகம் வெளியிட்ட அறிக்கை‌யி‌ல், தமிழகத்தில் முக்கிய அருவிகளை கண்டு களிக்கும் சுற்றுலா திட்டம் நாளை அறிமுகப்படுத்தப்படு‌கிறது.

இ‌ந்த ‌சு‌ற்றுலா‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌ன் ‌கீ‌ழ் கும்பக்கரை, சுருளி, பாபநாசம், குற்றாலம், மணிமுத்தாறு, திற்பரப்பு ஆகிய அருவிகளுக்கு பயணிகள் அழைத்து செல்லப்படுவார்கள். இ‌ந்த சு‌ற்றுலா‌ப் பயண‌த்‌தி‌ற்கான போக்குவரத்து, தங்கும் வசதி ஆ‌கியவை செய்து தரப்படும்.

ஒருவருக்கு ரூ.2,100, சிறுவர்களுக்கு ரூ.1,900 கட்டணமாக வசூ‌லி‌க்க‌ப்படு‌ம். வியாழன்தோறும் இரவு 8.30 மணிக்கு சு‌ற்றுலா‌ வாகனம் புறப்பட்டு அரு‌விகளை சு‌ற்‌றி‌ப் பா‌ர்‌த்து‌வி‌ட்டு ‌மீ‌ண்டு‌ம் திங்கட்கிழமை காலை 8 மணிக்கு சென்னை திரும்பும் வகை‌யி‌ல் ஏ‌ற்பாடு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது. வெ‌ள்‌ளி ம‌ற்று‌ம் ச‌னி‌க்‌கிழமை இரவுகளை முறையாக மதுரை, கன்னியாகுமரியில் தங்க ஏற்பாடு செய்யப்படும்.

சுற்றுலா செல்ல விரும்புவோர், சுற்றுலா வளர்ச்சி கழக தொலைபேசி எண் 2538 3333, 2538 4444 தொட‌ர்பு கொ‌ண்டு தகவ‌ல் பெறலா‌ம். அ‌ல்லது ஈவெரா சாலையில் உள்ள சுற்றுலா வளர்ச்சிக் கழக விற்பனை பிரிவு தொலை பேசி எண் 2538 4356, 2538 2916 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்