கொடைக்கானல்

மதுரை மாவட்டத்தில் பழநி மலைத் தொடரில் கடல் மட்டத்தில் இருந்து 2,100 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கொடைக்கானல், இந்தியாவின் தென் பகுதியில் உள்ள புகழ்பெற்ற கோடை சுற்றுலாத் தலமாகும்.

கோக்கர்ஸ் வாக் எனும் மலைப்பாதையில் (7,300 அடி உயரம்) நடந்துகொண்டே மலைச் சிகரங்களையும், அவைகளையும் தாண்டி வைகை அணை, பெரியகுளம், தேனி நகரங்களைக் காண்பது கண்கொள்ளாக் காட்சியாகும்.

கோடைக் காலங்களில் பகலிலேயே 20 சென்டிகிரேட் வெப்பம் மட்டுமே நிலவும் கொடைக்கானலில் ஏரியும், சுற்றுலாப் பயணிகளின் உற்சாகப் பயணத்திற்கு படகுச் சேவையும் உள்ளன.

இங்குள்ள பிரியன்ஸ் பூங்கா மிக அழகானது. செட்டியார் பூங்கா, குறிஞ்சி ஆண்டவர் கோயில், தூண் பாறைகள் ஆகியன மற்ற அருமையான இடங்களாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்