ஸ்மைலீ டைம்: ஜோக்ஸ் :-)

சனி, 11 மே 2013 (14:43 IST)
FILE
ஒரு நண்பர் என்னிடம் சொன்னார், ஒருவன் தன் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் போது இரண்டு விஷயங்களை கட்டாயம் கவனிக்க வேண்டும். ஒன்று மற்றவர்களுக்கு உதவும் குணம். 2வது நல்ல நகைச்சுவை உணர்வு என்று சொன்னார்.

ஆக ஒரு மனிதனுக்கு சிரிப்பும், நகைச்சுவை உணர்வும் எவ்வளவு முக்கியம் என்று அப்போது தான் தெரிந்து கொண்டேன். சரி இப்போ கொஞ்சம் சிரிக்கலாமா..?



FILE
ஜோக் 1:
டாக்டர் உங்க "கன்சல்டிங்" பீஸ் நூறு ரூபா தானே? எதுக்கு இருநூறு ரூபா ....கேக்குறீங்க?

வெளிய வெயிட் பண்ணும்போது நர்ஸ் கிட்ட உங்க டாக்டர் என்ன பெரிய அப்பாடக்கரா இவ்வளவு நேரம் காக்க வைக்கிராருன்னு கேட்டீங்கல்ல அதுக்கு "இன்சல்டிங்" பீஸ் நூறு ரூபா



FILE
ஜோக் 2:
நீதிபதி: இவ்ளோ பேர் இறந்திருக்கற இந்த ரயில் விபத்துக்கு ட்ரைவர்ங்கற முறைல நீ என்ன சொல்ற.

ட்ரைவர்: நான் இவ்ளோ பேரெல்லாம் கொல்லல. ஒருத்தன் தண்டவாளத்து மேல நடந்துனு போயினு இருந்தான். அவனதான் கொல்லனும்னு நினைச்சேன்.

நீதிபதி: அப்பறம் எப்படி இவ்ளோ பேர் செத்தாங்க.

ட்ரைவர்: நான் என்ன பண்றது. அவன் திமிரா தண்டவாளத்த விட்டு எறங்கி நடக்க ஆரம்பிச்சிட்டான். அதனால தான் நானும் ட்ரைன எறக்க வேண்டியதா போச்சு.

FILE
ஜோக் 3:
ஒருவர் டீக்கடையில் உட்கார்ந்து இருந்தபோது,
இரண்டு பிணங்கள் சுடுகாட்டுக்கு கொண்டு
செல்லப்படுவதைப் பார்த்தார். அவற்றுக்குப்
பின்னே நாயுடன் ஒருவர் நடந்து செல்ல,

அவருக்குப் பின்னே சுமார் 500 பேர் ஒருவர்
பின் ஒருவராக செல்லக் கண்டார்.

இது அவருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
நாய் வைத்திருந்தவரை அணுகி, “இது போன்ற பிண
ஊர்வலத்தை எத்தனையோ முறை பார்த்திருக்கிறேன்.

ஆனால் இந்த அளவுக்கு வரிசையாக யாரும்
சென்றதில்லை? ஆமாம், யாருடைய ஊர்வலம் இது?”

“முதலில் செல்வது எனது மனைவி.”

“என்ன ஆயிற்று அவருக்கு?”

“எனது நாய் அவரைக் கடித்து கொன்று விட்டது”

“இரண்டாவது பிணம்?”

“அது என் மாமியாருடையது. என் மனைவியைக்
காப்பாற்றச் சென்ற அவரையும் கொன்றுவிட்டது”

உடனே முதலாமாவர் ஆர்வத்துடன் கேட்டார்,
“இந்த நாய் எனக்கு வாடகைக்குக் கிடைக்குமா?”

அதற்கு அவர் சொன்னார், “வரிசையில் போய்
நில்லுங்கள்”!!

வெப்துனியாவைப் படிக்கவும்