தீபாவளி ஜோக்ஸ்!

திங்கள், 12 நவம்பர் 2012 (17:38 IST)
FILE
1. தாத்தா: ஏண்டீம்மா அந்த நீளமா உருளையா ஒரு காரம் பண்ணியிருதயே அது இன்னொண்ணு இருந்தா கொடு!

பேத்தி: அய்யய்யோ தாத்தா அது லஷ்மி வெடி!
-------------------------------------------------------------------------------------------------------------


2. என்ன குவாலிட்டி இருக்கு சார் வரவர ஒன்னுத்தலையும் குவாலிட்டியே இல்லை

என்ன சார் ஆச்சு ஏன் சலிச்சுக்கிறீங்க?

சீகக்காய், ஷாம்பூ, சோப்பு எல்லாம் போட்டும் நைட் அடிச்ச சரக்கோட நாத்தம் போகமாட்டேங்குதே!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

3. அது என்னங்க கெஜ்ரிவால் வெடி புதுசா இருக்கே?

ஏழு திரி இருக்குது பாருங்க! வாரம் ஒவ்வொண்ணா பத்திகிட்டு வெடிக்கும்!
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------

4. தீபாவளியும் அதுவுமா புருஷனுக்கும் பொண்டாட்டிக்கும் என்ன தகராறு?

முதல் நாள் நைட் பூரா சரக்கடிச்சுட்டு நேர வந்துருக்காரு, எண்ணெய் வைக்கும்போது ஃபிளாட் ஆயிட்டாரு அதான்!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

5.ஏண்டா உங்க தலைவரோட படம்தான் இல்லைன்னு சொல்லல்ல அதுக்காக தீபாவளி அன்னிக்கே போனாத்தான் ஆச்சா?

இல்லப்பா! அடுத்த நாள் தியேட்டரை விட்டே போயிடுச்சுன்னா!
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

6 டாக்டர்: உங்களுக்கு என்ன செய்றது? எதுக்கு பெட்ல உங்களை அட்மிட் பண்ணியிருக்காங்க?

வந்தவர்: என்ன டாக்டர் விளையாடுறீங்களா? உங்களைப் பார்த்து கல்யாண பத்திரிக்கை கொடுக்க வந்தேன் ஆனா உங்க ஆளுங்க என்னடான்னா குண்டு கட்டா கட்டித் தூக்கிட்டு வந்துட்டாங்க!
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


7. மனைவி: நான் அவ்வளவு பொடவை செலெக்ட் செஞ்சும் அந்த ஒரு புடவையைத்தான் அந்தக் கடைக்காரர் ரொம்ப நல்லாயிருக்குன்னு சொல்லி பேக் செஞ்சாரே ஏன்?

கணவன்: அது ஒன்னோட பீரோல இருந்த புடவைதான் ஹி... ஹி... நான் தான் செலவு மிச்சமாகட்டுமேன்னு ஏற்கனவே கடைக்காரர் கிட்ட கொடுத்து வச்சுருந்தேன்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


8.அம்மா தீபாவளின்னா என்ன அம்ம?

அது தீபாவளின்னு சொன்னாலும் உண்மையில் அது தீப ஒளி அன்னிக்கு விளக்குகள் ஏற்றி ஒளிமயமா இருக்கணும் அதான் தீபாவளி!

ஓ! தீபாவளி அன்னிக்கும் கரண்ட் இருக்காதுன்னு அப்பவே இதை கண்டுபிடிச்சிருக்காங்களா?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


9.அவரோட மனைவி பயங்கர குண்டுன்ஙறதுன்னாலே குண்டுங்கற வார்த்தையைக் கண்டாலே அவருக்கு அலர்ஜி!

என்ன அவ்வளவு பயந்தவரா அவரு?

பின்ன அணுகுண்டு கொடுங்கங்கறதுக்குப் பதிலா கடைல போய் 'அணு ஒல்லி' கொடுங்கன்னார்னா பாத்துக்கங்களேன்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


10. டேய் கமலா நீ செஞ்ச அந்த மைசூர்பாகு ஒரு அஞ்சாறு எடுத்துகிட்டு வா?

நான் சொன்னேன் இல்லை அது நல்லாத்தான் பண்ணியிருக்கேன்னு இப்ப பாருங்க நீங்களே கேக்கறீங்க!

அடச் சீ! இங்க எறும்புப் புத்து ஒண்ணு இருக்கு உன் மைசூர்பாகை அங்க போட்டா எறுமெல்லாம் ஓடிப்போயிடும்னுதான் கேட்டேன்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


11. என்னடா உங்க வீட்டுல தீபாவளியும் அதுவுமா டிவி கேமரா, டைரக்டர், ஒளிப்பதிவாளர் எல்லாம் வந்து ஏதோ ஷூட் செஞ்சாங்க?

அதுவா என் ஒய்ஃபுக்கும் என் அம்மாவுக்கு நடக்கற சண்டை டிவி சீரியலையே தூக்கி சாப்பிடற மாதிரி இருக்குன்னு எவனோ போட்டுக் கொடுத்துட்டான், உடனே தீபாவளி ஸ்பெஷல்னு காண்பிக்க லைவ் ரிலேக்கு வந்துட்டாங்க.

வெப்துனியாவைப் படிக்கவும்