ஜக்கு - மக்கு ஜோக்ஸ்!

வெள்ளி, 23 ஆகஸ்ட் 2013 (12:50 IST)
ஜக்கு: ஏண்டா மக்கு ஒரு கால் பிளாட்பாரத்திலயும், ஒரு கால் ரோடுலையும் வச்சு நடக்கற?

மக்கு: நல்லவேளை ஞாபகப் படுத்தினடா ஜக்கு, நான் கூட எங்க நொண்டியாயிட்டேனோன்னு பயந்தே போயிட்டேன்.
-------------------

ஜக்கு: என்னடா 5 மணிக்கு வரேன்னுட்டு ஆறரை மணிக்கு வர்ற?

மக்கு: ரோடுல ஒத்தன் 500ருபா நோட்டைத் தொலைச்சுட்டு தேடிக்கிட்டு இருந்தான்!

ஜக்கு: பரவாயில்லையே! தேடி எடுத்துக் கொடுத்தியா?

மக்கு: இல்லை அவர் போற வரைக்கும் நோட்டு மேலேயே நின்னுகிட்டு இருக்கவேண்டியதாப்போச்சு.
---------------------

மக்கு: ஏன் எல்லாம் ஓடறாங்க?

ஜக்கு: இது பேர் ஓட்டப்பந்தயம் 'கப்' கிடைக்கணம்னு ஓடறாங்க.

மக்கு: யார் கப் வாங்குவாங்க?

ஜக்கு: யார் பர்ஸ்ட் வராங்களோ அவங்க கப் வங்குவாங்க!

மக்கு: அப்பறம் எதுக்கு எல்லாரும் ஓடறாங்க?

மக்கு: என் பையன் தங்கமானவன்டா!

ஜக்கு: எப்படி சொல்ற?

மக்கு: சிகரெட், தண்ணி, பொம்பள... எந்த கெட்டப்பழக்கமும் கிடையாது.

ஜக்கு: உன் பையனுக்கு என்ன வயசு?

மக்கு : ஒரு வயசு.
----------------------

ஜக்கு: தெரியாம கவர்ல 4 ரூபாய்க்கு ஸ்டாம்ப் ஒட்டிட்டேன். 2 ரூபாக்கு ஒட்டினாலே போதும்.

மக்கு: அதனால என்ன? இன்னும் 2 ரூபாய்க்கு ஸ்டாம்ப் வாங்கு

ஜக்கு: எதுக்கு அதான் 4 ரூபாய்க்கு ஸ்டாம்ப் ஒட்டியிருக்கேனே

மக்கு: இன்னொரு 2 ரூபாய்க்கு ஸ்டாம்ப் வாங்கி, கவர்ல ஒட்டி நடுப்பற மைனஸ் ஸ்டாம்புன்னு எழுதிடு!
----------------

ஜக்கு: ஏய் மக்கு எங்க போய்கிட்டிருக்க?

மக்கு: தொவரம் பருப்பு வாங்க மீனாட்சி மெடிக்கல்ஸ் போயிட்டு இருக்கேன்.

ஜக்கு: பருப்பு வாங்க எதுக்குடா மெடிக்கல் ஷாப்பு?

மக்கு: மீனாட்சி + மெடிகல்ஸ்னு போட்டுருக்கானே.
--------------------

ஜக்கு: வாடா சும்மா பீச்சுக்கு போயிட்டு வரலாம்...

மக்கு: நா வர்லப்பா... அங்க ஒரே மண்ணா இருக்கும்!

மக்கு: இன்னிக்கு ஸ்கூல்ல வாத்தியார் என்னை பிரம்பால அடி அடீன்னு அடிச்சுட்டாரு!

ஜக்கு: ஏன் என்ன தப்பு செஞ்ச?

மக்கு: 33 எழுதச் சொன்னார்! தெரியலைன்னு முழுச்சேன், சரி 3 போட்டு பக்கத்துல 3 போடச்சொன்னாரு

ஜக்கு: இது கூட தெரியலையா?

மக்கு : ஒரு 3 போட்டுட்டேன், இன்னொரு 3-ஐ எந்தப் பக்கம் போடணும்னு கேட்டேன்!

-------------------

மக்கு: இதான் என்னோட குழந்தை

ஜக்கு: ரொம்ப அழகா இருக்கே! என்ன பேரு?

மக்கு: அதைத்தான் நானும் கேக்கறேன், ஆனா அது பேசறதே புரியமாட்டேங்குது.
---------------

கிரிக்கெட் போட்டியில் மக்கு!

நடுவர் மக்குவிற்கு எல்.பி.டபிள்யூ அவுட் கொடுக்கிறார். மக்கு திட்டிக் கொண்டே வருகிறான்.

ஜக்கு: ஏன் திட்ற, பந்து பேட்ல பட்டுச்சா?

மக்கு: இல்லை!

ஜக்கு: பின்ன பந்து ஸ்டம்பை விட்டு வெளியே போற பந்தா?

மக்கு: இல்ல கால்ல பட்டு அவ்வளவு தூரம் போகுது அதுக்கு போய் எல்.பி. கொடுப்பானா?

ஜக்கு: ஏண்டா மக்கு காலைல ஏன் உங்க அப்பா உன்னைப் போட்டு அடிச்சாரு?

மக்கு: ஆமாம்! கோழிக்கு தண்ணி வச்சேன்!

ஜக்கு: அதுக்கு போயா அடிச்சாரு?

மக்கு: சுடுதண்ணி வைடா அப்பத்தான் கோழி முட்டை போடும்போது அவிச்ச முட்டையா போடும்னு எங்க தாத்தா சொன்னதைப் போய் நம்பித் தொலைச்சேன்.
----------------

மக்கு நாய் வாங்கச் செல்கிறான்...!

கடைக்காரர்: இந்த நாயோட ஸ்பெஷாலிட்டி என்னன்னா, அதோட ஒரு காதை திருகினீங்கன்னா நீங்க சொல்றதக் கேக்கும் இன்னொரு காதைத் திருகினீங்கன்னா இப்ப டைம் என்னன்னு சொல்லும்.

மக்கு: 2 காதையும் திருகினா?

நாய்: கடிச்சுக் கொதறிப்புடுவேண்டா ராஸ்கல்!
---------------

மக்கு: என்னோட அதிர்ஷ்டமான நாள் 7ஆம் தேதி, பேங்க்ல போய் 7000 ரூபா எடுத்துகிட்டி ரேசுக்குப் போனேன். அங்கேயும் 7 குதிரைங்க.

ஜக்கு: ஜெயிச்சுதா?

மக்கு: 7வதா வந்துச்சு.

ஜக்கு: யாரோ ஒரு மாசமா தினம் காலிங் பெல்லை அடிச்சுட்டு ஓடிப்போயிடறாங்க! பெரிய தொல்லையாப் போச்சு.

மக்கு: நீ ஏன் காலிங் பெல்லை வெளில வச்ச?
-------------------

மக்கு: டிரெயின்ல கடைசி கோச்ல உக்காந்ததால டீ, காபி, டிபன் எதுவும் வர மாட்டேங்குது.

ஜக்கு: புகார் கொடுக்க வேண்டியதுதான?

மக்கு: கொடுத்தும் ஒண்ணும் பிரயோஜனமில்லை.

ஜக்கு: என்ன புகார் கொடுத்த?

மக்கு: கடைசி கோச்சை எடுத்து நடுவுல போடச்சொல்றேன்,ஒரு பய கேக்கமாட்டேன்கிறான்.
---------------

ஜக்கு: அக்கவுண்டண்ட் வேலைக்குப் போனியே என்ன ஆச்சு?

மக்கு: செலெக்ட் ஆகல! ஆனா வருஷத்துக்க்கு 84,000 சம்பளம்!

ஜக்கு: ஏன் நல்ல சம்பளம்தான!

மக்கு: நல்ல சம்பளம்தான், வருஷத்துக்கு 84,000ம்னா மாசத்துக்கு எவ்வளவுன்னு கேட்டேன்.

மக்கு: பந்து பவுண்டரியைத் தாண்டியதும் அம்பயர் என்னவோ சைகை செய்யறாரே?

ஜக்கு: கையை ஆட்டி 4 ரன் அப்டீன்னு சொல்றாரு!

மக்கு: நீ தப்பா சொல்ற, 4 இல்லைங்கறதத்தான் அப்படி செய்கை செய்றார்னு எனக்கு தோணுது.
------------

மக்கு: பேங்க்ல கொள்ளை அடிச்சும் ஒரு பிரயோஜனமும் இல்லாமப் போச்சு.

ஜக்கு: ஏன்?

மக்கு: 100 ரூபாய்க்கு சில்லறைக் கொடுன்னு துப்பாக்கி காட்டி கேஷியரை மிரட்டி அங்க இருந்த பணத்தை அடிச்சேன்.

ஜக்கு: சரி அதனால என்ன?

மக்கு: அவசரத்துல 100 ரூபாய அங்கேயே விட்டுட்டு வந்துட்டேன்.

ஜக்கு: அதுனால என்ன? உன் கிட்டத்தான் நிறைய பணம் இருக்கே?

மக்கு: மண்ணாங்கட்டி கேஷியர் கிட்டேயிருந்து அடிச்ச பணத்துல 75 ரூபாத்தான் இருந்துச்சு.

வெப்துனியாவைப் படிக்கவும்