மாயாவை கலீஜ் என்றும், பூர்ணிமாவை ஸ்லோ பாய்சன் என்றும், விஷ்ணு நம்ப தகாதவர் என்றும் கூறியுள்ளார். அதேபோல் நிக்சன், ஜோவிகா, ஐஷு உள்ளிட்டோர் தான் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
மரியாதை என்பது நாம் கொடுத்தால் தான் திரும்ப வரும். 30 வயது பிரதீப்பை வாடா போடா என்று பேசுவது அவரது எதிர்காலத்துக்கு நல்லதல்ல, என் அப்பா கூட என்னை வாடா போடா என்று பேசியதில்லை, அந்த அளவுக்கு வயதில் சிறியவர்களுக்கு கூட மரியாதை கொடுப்பார், அந்த ஒரு விஷயத்தை மட்டும் ஜோவிகா கற்றுக் கொண்டால் அவர் வாழ்க்கையில் முன்னேறுவார் என்றும் அறிவுரை கூறினார்.