'எனது மகன் போல் இருந்தாய்..உன்னை இழந்த வலி'- ஹன்சிகா வேதனை

வியாழன், 19 அக்டோபர் 2023 (21:25 IST)
ஹன்சிகா செல்லமாக வளர்த்து வந்த புரூஸோ என்ற நாய் இறந்து போனது பற்றி வலைதளத்தில் சோகத்துடன் பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர், வேலாயுதம், வாலு, சிங்கம், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளவர் ஹன்சிகா மோத்வானி.

இவர் சமீபத்தில் தனது நண்பர் மற்றும் தொழிலபதிபரை மணது கொண்டார். இந்த நிலையில், ஹன்சிகா சினிமாவில் நடிப்பதுடன் தொழிலிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில்,  ஹன்சிகா செல்லமாக வளர்த்து வந்த புரூஸோ என்ற நாய் இறந்து போனது. இதுகுறித்து நடிகை ஹன்சிகா தன் வலைதள பக்கத்தில், எனது மகன் போல் இருந்தாய்..உன்னை இழந்த வலியை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது என்று பதிவிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்