நீங்கள் அற்புதமான மனிதர் – சிவகார்த்திகேயனை புகழ்ந்த அனிருத்

புதன், 17 பிப்ரவரி 2021 (15:40 IST)
தமிழ் சினிமாவில் இளம்நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தனியார் தொலைக்காட்சியில்  நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து பின்னர் தனது தனித்திறமையின் மூலம் இன்று வெற்றி பெற்ற நடிகராக வலம் வருபவர்.

இவர் இன்று தனது 36 வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இவரது தென்னிந்திய சினிமா பிரபலங்கள்  மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சிவகார்த்திகேயனின் நண்பரும் இசையமைப்பாளருமான அனிருத் தனது டிவிட்டர் பக்கத்தில் அவரை வாழ்த்தி ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில், இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என் நெருங்கிய சிவகார்த்திகேயன்! உங்களுக்கு வாழ்க்கையில் சிறப்பான நிகழ்வுகள் மட்டுமே நடக்கும்…நீங்கள் அற்புதமான மனிதர்… இந்த வருடம் சிறப்பாக  அமைய வாழ்த்துகள் எனத்  தெரிவித்துள்ளார்.

மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு அயலான் படத்தில் இடம்பெற்றுள்ள முதல் பாடல் வெளியாகிவுள்ளது. .ஏ.ஆர்.ரகுமான் இசையில் வேற லெவல் சகோ என்ற பாடலை  சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

Happy birthday my dearest @Siva_Kartikeyan ! Only the best things will happen to you in life for the wonderful person that you are

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்