யோகிபாபு-கருணாகரன் படத்தின் டைட்டில் அறிவிப்பு!

திங்கள், 2 செப்டம்பர் 2019 (11:42 IST)
காமெடி நடிகர் யோகி பாபு சமீபகாலமாக ஹீரோவாக நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. அவர் ஹீரோவாக நடித்த 'தர்மபிரபு', 'கூர்கா' ஆகிய திரைப்படங்கள் வெளியாகி உள்ள நிலையில் இந்த வாரம் 'ஜாம்பி' என்ற திரைப்படமும் வெளியாக உள்ளது 
 
 
இந்த நிலையில் யோகிபாபு ஹீரோவாக நடித்து வரும் இன்னொரு படத்தின் டைட்டிலும் சற்றுமுன் அறிவிக்கப்பட்டது. இந்த படத்துக்கு 'ட்ரிப்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை டெனிஸ் மஞ்சுநாத் என்பவர் இயக்கி வருகிறார். யோகிபாபு உடன் கருணாகரன் மற்றும் சுனைனா நடித்துள்ள இந்த படத்தை சாய்பிலிம் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு சித்துகுமார் என்பவர் இசையமைத்துள்ளார். உதயசங்கர் ஒளிப்பதிவில் தீபக் துவாரகநாத் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
 
 
யோகிபாபு இதுவரை காமெடி கேரக்டர்களில் மட்டுமே நடித்து வந்த நிலையில் முதல்முறையாக ஒரு ஆக்சன் படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்தப் படம் திகில் மற்றும் சஸ்பென்ஸ் கதையம்சம் கொண்ட படம் என்பதால் காமெடிக்கு அதிக முக்கியத்துவம் இருக்காது என்றும் கூறப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்