சமீபகாலமாக வெளிவரும் பெரும்பான்மையான படங்களில் யோகி பாபுவின் காமெடி இடம்பெற்றுவிடுகிறது. அந்த அளவுக்கு அவரது யதார்த்தமான நடிப்பும், உருவ அமைப்பும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்து போக இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கூடி கொண்டே வருகிறது. தற்போது தளபதி 63 படத்திலும் கம்மிட்டாகி நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவலென்னவென்றால், காமெடி கிங் யோகி பாபு தான் நடிக்கவிருக்கும் அடுத்த படத்திற்கு அவரே கதை, திரைக்கதை வசனம் எழுதுகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை இயக்குநர் ராஜேஷின் உதவி இயக்குனர் ராஜசேகர் இயக்கவுள்ளார். யோகிபாபு ஏற்கனவே லொள்ளுசபாவிற்கு காமெடி ஸ்க்ரிப்ட் எழுதியவர் ஆதலால் இந்த புது அவதாரத்தில் அனுபவம் உள்ளவர் என்பதால் அவரது ஸ்க்ரிப்டில் உருவாகும் காமெடிக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.