ஏ.ஆர்.ரகுமான் காலில் விழுந்த ஹனி சிங்! – வைரலாகும் வீடியோ!

சனி, 4 ஜூன் 2022 (18:13 IST)
இந்திய திரைப்பட அகாடமி நிகழ்ச்சிக்காக பாடல் ஒத்திகையில் இருந்த ஹனி சிங் ஏ.ஆர்.ரகுமான் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற வீடியோ வைரலாகியுள்ளது.

சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் வழங்கும் விழா அபுதாபியில் உள்ள யாஸ் ஐலேண்டில் நடைபெற உள்ளது. இந்த விழாவை நடிகர்கள் சல்மான்கான், ரித்திஷ் தேஷ்முக் உள்ளிட்டோர் தொகுத்து வழங்க உள்ளனர்.

மேலும் பல பாலிவுட் நடிகை, நடிகர்களும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கான ஒத்திகை நடைபெற்று வருகிறது. இதற்கான ஒத்திகையில் பிரபல இந்தி பாடகர் யோ யோ ஹனிசிங் ஈடுபட்டிருந்தார்.

அப்போது கீழே அமர்ந்திருந்த ஏ.ஆர்.ரஹ்மானிடம் வந்து அவரது காலில் விழுந்து வணங்கினார். இந்த விடியோவை ஹனிசிங் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by yyhs.india_ (@yyhs.india_)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்