சத்ரபதி சிவாஜி கேரக்டரில் யாஷ் நடிக்க வேண்டும்: ரசிகர்கள் விருப்பம்

வெள்ளி, 3 ஜூன் 2022 (08:20 IST)
சத்ரபதி சிவாஜி கேரக்டரில் யாஷ் நடிக்க வேண்டும்: ரசிகர்கள் விருப்பம்
சத்ரபதி சிவாஜி கேரக்டரில் கேஜிஎப் யாஷ் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். 
 
கேஜிஎப் முதல் பாகம் இரண்டாம் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலில் சாதனை படைத்த நிலையில் தற்போது கேஜிஎப் யாஷ் என்றால் யார் என்பது இந்திய திரையுலகையே தெரிந்துவிட்டது. 
 
இந்த நிலையில் மராட்டிய மன்னர் சத்ரபதி கேரக்டருக்கு கேஜிஎப் யாஷ் மிகவும் பொருத்தமாக இருப்பார் என்றும் சிவாஜி படத்தை உருவாக்கினால் யாஷ் தான் சிவாஜி கேரக்டரில் நடிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கூறியுள்ளனர். 
 
மேலும் இந்த படத்தை ராஜமவுலி இயக்க வேண்டும் என்றும் அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி சிவாஜி தோற்றத்தில் யாஷ் இருப்பது போன்று புகைப்படத்தையும் போஸ்டரையும் சித்தரித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கி வருகின்றன. இந்த புகைப்படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்