யாஷ் நடித்து பிரசாத் நீல் இயக்கத்தில் வெளியான படம் கேஜிஎஃப் மற்றும் கேஜிஎஃப் சாப்டர் 2. சமீபத்தில் வெளியான கேஜிஎஃப் 2 மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்த பாகத்திற்கான லீடும் இரண்டாம் பாகத்தில் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் யாஷ் இப்போது இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் நடிகராகியுள்ளார் யாஷ். இனிமேல் அவர் பேன் இந்தியா திரைப்படங்களில் மட்டுமே நடிப்பார் என்று கேஜிஎஃப் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பாலிவுட்டில் இந்த ஆண்டு வெளியாகி ஹிட்டான சில படங்களில் ஒன்றான பிரம்மாஸ்திரா படத்தின் இரண்டாம் பாகத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க யாஷிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், ஆனால் அவர் அதில் நடிக்க மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.