அருண்விஜய் அடுத்த படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!

வியாழன், 9 செப்டம்பர் 2021 (18:38 IST)
அருண்விஜய் அடுத்த படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!
பிரபல நடிகர் அருண் விஜய் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தது. முதல் கட்ட படப்பிடிப்பு பழனியில் நடைபெற்றது என்பதும் அதனை அடுத்து ராமேஸ்வரத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த படத்திற்கு ’யானை’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதும் அருண்விஜய்யின் அட்டகாசமான போஸ்டர்கள் இணையதளங்களில் ஸ்தம்பித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
அருண் விஜய் ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்து வரும் இந்த திரைப்படத்தில் ராதிகா, யோகிபாபு, அம்மு அபிராமி, சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்து வருகின்றனர். ஜீவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பதும் டிரம்ஸ்டிக் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்