நிறவெறித் தாக்குதலுக்கு ஆளான உலகப் புகழ் பெற்ற வீரர் !ரசிகர்கள் அதிர்ச்சி

செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (16:52 IST)
சமீககாலமாகவே நிறவெறித் தாக்குதலுக்கு ஆளாகும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சில மாதங்களுக்கு முன் அமெரிக்காவில் ஜார்ஜ் பிலாயிட் ஒரு போலீசாரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும்   அதிர்ச்சியையும் உலகளவில் இனவெறிக்கு எதிராக ஒரு போராட்டத்தையும் ஏற்படுத்தியது. அமெரிக்காவில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரபல ஃபேர் அண்ட் லவ்லி நிறுவனம்கூட தனது பெயரை குளோ அண்ட் லவ்லி என மாற்றியது.

ஐபிஎல் தொடரில் சிலர் இனரீதியாக பாதிக்கப்பட்டதாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் புகார் தெரிவித்ததால் கிரிக்கெட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், உலகில் பெரும் ரசிகர்கள் வட்டத்தைக் கொண்டு பிரபலமான விலைமதிப்பான கால்பந்தாட்ட வீரராக மதிப்பிடப்படும் பிரேசில் நாட்டைச் சேர்ந்த நெய்மர் கிளப் அணிகளுக்கிடையே ஆன போட்டியில் பங்கேற்று PARIS – SAINT – GERMAN அணிக்காக விலையாடி வருகிறார்.

இந்த நிலையில், Marseillie என்ற அணியுடன் விளையாடும்போது, தன் இனவெறிக்கு ஆளாவதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னை அல்வாரோ கோசனைஸ் (alvaro Gonxalez) என்ற குரங்குடன் திட்டியதாகத் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்போட்டியில் நெய்மர் அணி 0-1 என்ற கணக்கில் தோற்றது குறிப்பிடத்தககது.
.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்