பெண்களை சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் வரவே கூடாது என்று தடுப்பது தவறு என நடிகர் சிவகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகர் சிவகுமார் பேசுகையில், நூறு ஆண்டுகளுக்கு முன் சபரிமலை அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது. ஐயப்பன் கோவிலுக்குள் செல்ல சரியான பாதை வசதி இல்லாததால். விலங்குகள் தாக்கும் அபாயம் இருந்த நிலையில் ஆண்கள் மட்டும் கூட்டமாக கோஷம் எழுப்பியபடி சென்று வழிபட்டனர்.
பெண்களுடைய உதிர போக்கு மோப்ப சக்தி கொண்ட விலங்குகளை ஈர்க்கும் சக்தி கொண்டதால் . ஆண்கள் பெண்களை உடன் அழைத்து இல்லை. ஆனால் தற்போது காலம் நவீனமயமாகி விட்டது. பழைய காலத்து அச்சங்கள் இப்போது இல்லை. நீதிமன்றமும் அனுமதி வழங்கிய நிலையில். இனியும் பெண்களை சந்நிதானத்துக்குள் வரவே கூடாது என்று தடுப்பது தவறு. விரத காலங்களை தவிர்த்து வேறு நாட்களில் பெண்களும் வந்து வழிபாடு செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்' இவ்வாறு கூறினார்.