தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷால் கைது செய்யப்படுவாரா?

செவ்வாய், 4 ஏப்ரல் 2017 (23:32 IST)
சமீபத்தில் நடந்த தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷாலின் நம்ம அணி மிகப்பெரிய வெற்றி பெற்று நடிகர் சங்கத்தை போலவே தயாரிப்பாளர் சங்கத்தையும் கைப்பற்றியுள்ளது.





வெற்றி பெற்ற வேட்பாளர்கள் வரும் வியாழன் அன்று சென்னையில் உள்ள ஸ்ரீராகவேந்திரா திருமண மண்டபத்தில் பதவியேற்க உள்ளனர். பதவியேற்றவுடன் திருட்டு விசிடிக்கு எதிராக அதிரடி நடவடிக்கை ஆரம்பமாகும் என தெரிகிறது.

இந்த நிலையில்  தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தன்னைத் தாக்கியதாகவும், தகாத வார்த்தைகள் கூறி திட்டியதோடு மட்டுமின்றி கொலை மிரட்டல் விடுத்ததாகவும்  தயாரிப்பாளர் அலாவூதின் என்பவர் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விஷாலை கைது செய்வார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

வெப்துனியாவைப் படிக்கவும்