Valimai vs Beast - இந்த வருடம் தல தளபதி பொங்கல்?

புதன், 22 செப்டம்பர் 2021 (12:21 IST)
நடிகர் அஜித்தின் வலிமை படமும் விஜய்யின் பீஸ்ட் படமும் பொங்கலுக்கு மோதிக்கொள்ளும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

 
நடிகர் அஜித் நடித்து எச்.வினோத் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் வலிமை. போனி கபூர் இந்த படத்தை தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு தொடங்கி வருடங்கள் ஆகியும் படம் குறித்த அப்டேட் வெளியாகாமல் இருந்து வந்ததால் ரசிகர்கள் பலர் அப்டேட் கேட்டு அதை வைரலாக்கி வந்தனர்.
 
இந்நிலையில் தயாரிப்பாளர் போனிக்கபூர் வலிமை திரைப்படம் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாவதாக அறிவித்துள்ளார். வலிமை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதை அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர். 
 
இதனிடையே தளபதி விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு மூன்று கட்டங்கள் ஏற்கனவே முடிவடைந்து விட்ட நிலையில் நான்காம் கட்டப்படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது. மொத்த படப்பிடிப்புமே நவம்பர் மாதத்தில் முடிய உள்ளதாக தெரிகிறது. எனவே பீஸ்ட் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. 
 
இது உறுதியாகும் பட்சத்தில் தல மற்றும் தளபதி படம் ஒரே நாளில் வெளியாகும். இது விஜய் மற்றும் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தும். கடைசியாக அஜித்தின் வீரம் மற்றும் விஜய்யின் ஜில்லா ஒரே நாளில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்