அதே பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்படும் சிவலிங்கா!

திங்கள், 2 ஜனவரி 2017 (11:49 IST)
பி வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் ஜோடியாக ரித்திகா சிங் நடிக்கும் படம் சிவலிங்கா. இப்படத்தில் வடிவேலுவுக்கு  சந்திரமுகியில் வந்ததை விட பவர்ஃபுல் ரோல் என்கிறார் இயக்குநர் வாசு.

 
இப்படம் குறித்து பி வாசு செய்தியாளர்களிடம் கூறுகையில், 
 
கடந்த ஆண்டின் கன்னடத்தில் சென்சேஷனல் ஹிட் சிவலிங்கா. 85 அரங்குகளில் 100 நாட்கள் ஓடிய படம். அந்தப் படத்தை  அதே பெயரில் இப்போது தமிழில் எடுத்துள்ளேன். இந்த மாத இறுதியில் திரைக்கு வரவிருக்கிறது.
 
லாரன்ஸ் இதுவரை செய்யாத கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சிபிசிஐடி அதிகாரியாக வருகிறார். அவரது நடிப்பு  வித்தியாசமாக இருக்கும். சிவலிங்கா படம் தமிழ், தெலுங்கு இரண்டிலும் வெளியாகிறது. இப்படத்தை உலகம் முழுவதும்  திரையிட தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ளார்.

வெளிநாடுகளில் உள்ள அந்தந்த மொழிகளுக்கு ஏற்ப ‘சப்-டைட்டில்' கொடுக்க உள்ளோம். ஜனவரி 26-ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறோம். லாரன்சின் தாயாராக ஊர்வசி, கதாநாயகியின் தாயாராக  பானுப்பிரியா நடித்துள்ளார்கள் என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்