தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான விஷால் பாஜகவில் சேர உள்ள அந்த ஹீரோ என்பது தெரியவந்துள்ளது. விஷால் விரைவில் பாஜகவில் சேர இருப்பதாகவும் இதற்காக அவர் பாஜக தமிழக தலைவர் எல் முருகன் அவர்களை சந்திக்க இருப்பதாகவும் விரைவில் இருவரது சந்திப்பு நடக்கும் என்றும் கூறப்படுகிறது அதன் பின்னர் ஒரு பிரமாண்டமான விழா நடத்தி அதில் பாஜகவில் விஷால் இணையும் நிகழ்வு நடக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதை அவர் மறுத்துள்ளார்.
இதற்கிடையில் விஷால் ஏன் பாஜகவில் சேரப்போகிறார் என்பதற்கான ஒரு காரணமும் சொல்லப்படுகிறது. வரிசையாக படங்களை தயாரித்த விஷால் பெரும் கடனில் சிக்கி இருப்பதாலும், அதை சரி செய்து கொள்ளவே பாஜகவில் சேரப்போவதாகவும் சொல்லப்படுகிறது. அதனால் விரைவில் பாஜகவில் விஷால் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.